Friday, June 25, 2010

பொன்வானம் பன்னீர் தூவுது


இளையராஜாவின் இசையில், ஜானகியின் குரலில் ஒலிக்கும் இந்தப் பாடல் கேட்கும் போது தேவ கானமோ என்று எண்ண வைக்கும் அளவுக்கு உள்ளத்தை ஊடுருவிச் சென்று   மனதை வருடும் தன்மையது.  தூறலாய் ஆரம்பிக்கும் இசை மெல்ல மெல்ல மனதை தூவானமாய் நனைத்து, அடை மழை போல் வேகமெடுத்து வந்ததும், பாடல் வரிகள் மீண்டும் தூவானமாய் எம் மனதில் விசிறும் ஒரு அற்புதமான அனுபவத்தை உருவாக்கும் பாடல் இது. இன்று நீ நாளை நான் என்ற படத்தில் சிவகுமாரும் லஷ்மியும் தோன்றும் பாடல் காட்சி கீழே.



பொன்வானம் பன்னீர் தூவுது இன்னேரம்
பொன்வானம் பன்னீர் தூவுது இன்னேரம்
அட எண்ணம் மீறுது, வண்ணம் மாறுது கண்ணோரம்
பொன்வானம் பன்னீர் தூவுது இன்னேரம்


மழைத்தூறலே ஒதுங்க இடம் பார்க்குதே
மலர் அம்புகள் உயிர் வரைக்கும் தாக்குதே
மழை செய்யும் கோளாறு...கொதிக்குதே பாலாறு
மழை செய்யும் கோளாறு...கொதிக்குதே பாலாறு
இது காதல் ஆசைக்கும், காமன் பூஜைக்கும் நேரமா
இது காதல் ஆசைக்கும், காமன் பூஜைக்கும் நேரமா
இந்த ஜோடி வண்டுகள் கோடு தாண்டிடுமா


பொன்வானம் பன்னீர் தூவுது இன்னேரம்
பொன்வானம் பன்னீர் தூவுது இன்னேரம்
அட எண்ணம் மீறுது, வண்ணம் மாறுது கண்ணோரம்
பொன்வானம் பன்னீர் தூவுது இன்னேரம்


தங்கத்தாமரை மலர்ந்த பின்பு மூடுமோ
பட்டுப்பூங்கொடி படர இடம் தேடுமோ
மலர்க்கணை பாயாதோ...மதுக்குடம் சாயாதோ
மலர்க்கணை பாயாதோ...மதுக்குடம் சாயாதோ
இது  வெள்ளை மல்லிகை தேவகன்னிகை தானம்மா 
இது  வெள்ளை மல்லிகைதேவகன்னிகை தானம்மா
மழை காமன் காட்டில் பெய்யுங்கால் அம்மம்மா


பொன்வானம் பன்னீர் தூவுது இன்னேரம்
பொன்வானம் பன்னீர் தூவுது இன்னேரம்
அட எண்ணம் மீறுது, வண்ணம் மாறுது கண்ணோரம்
பொன்வானம் பன்னீர் தூவுது இன்னேரம்

No comments:

Post a Comment

உங்கள் எண்ணங்களைப் பகிர்க நண்பர்களே

Related Posts with Thumbnails