Tuesday, June 8, 2010

ஆப்பிள் ஐபோன் 4


ஆப்பிள் நிறுவனம் தனது புதிய ஐபோன் 4 இனை வெளியிட்டுள்ளது. இந்த புதிய ஐபோன், நிறைய மாற்றங்களோடு புதிய வசதிகளோடு வெளிவந்துள்ளது. குறிப்பாக, எந்த விடயங்களில் முதல் தொகுதி ஐபோன் பின்தங்கி இருந்ததோ, அவற்றை எல்லாம் நிவர்த்தி செய்து கவர்ச்சிகரமாக வெளிவந்துள்ளது. பின்வரும் புதிய அம்சங்கள் ஐபோன் 4 இல் புதிதாக உள்ளடக்கப்பட்டு இருக்கிறது.

முகம் பார்த்து பேசும் வசதி



இருவர் தொலைபேசி மூலம் பேசும் போதே, ஒருவரை ஒருவர் பார்த்து பேசும் வசதி . இந்த போனில் இரண்டு காமராக்கள் உள்ளன, அவை இரண்டையும் மாற்றி மாற்றி உபயோகித்து வீடியோ உரையாடல் செய்ய முடியும். இந்த வசதி தொலைபேசி சேவை வழங்கும் நெட்வொர்க் இலும் தங்கி உள்ளது.


ரெடினா முகப்புத் திரை


இந்த ஐபோன் இல், உள்ள முகப்புத் திரையானது, முந்திய வெளியீடுகளின் முகப்புத் திரையின் துல்லியத்தை விட நான்கு மடங்கு துல்லியமானதாகும். இதனால், திரையில் உள்ள புள்ளிகளின் வேற்றுமையை மனிதக் கண்களால் கண்டுபிடிக்க முடியாது.


பல பயன்பாடுகளை ஒரே நேரத்தில் இயக்குதல்


இதற்கு முந்திய ஐபோன்களில் இருந்த பெரிய குறைபாடு, ஒரே நேரத்தில் ஒரு பயன்பாட்டை மட்டும் இயக்க முடியும் என்பதாகும். இதற்கு ஐபோன் இயங்குதளத்தில் ஒரு அப்டேட் ஐ ஆப்பிள் நிறுவனம் வெளியிட்டு இருந்தது. ஆனால் இந்தப் புதிய ஐபோன் 4 வெளியீட்டில் அந்த வசதி இணைக்கப்பட்டு இலகுவான முறையில் பயன்படுகளிடையே பயணிக்கும் முறைமை உள்ளடக்கப்பட்டு இருக்கிறது.




மிகை வரைவிலக்கண (Hi-Definition) வீடியோ 



புதிய ஐபோன் HD வீடியோ பதிவு செய்யும் வசதியுடன், அதை எடிட் செய்யும் வசதியும் கொண்டுள்ளது. வீடியோ வை படமாக்கிய உடனேயே அதில் வைத்து எடிட் செய்து இன்டர்நெட் இல் தரவேற்றம் செய்ய முடியும்.


5 மெகா பிக்ஸெல் கேமரா 

இதிலுள்ள 5 மெகா பிக்ஸெல் கேமரா மூலம் மிகத் துல்லியமான படங்களை பதிவு செய்ய முடியும். பின் பக்கத்திலுள்ள வெளிச்ச உணரி ( illumination sensor), குறைந்த ஒளியிலும், சிறந்த படங்களை எடுக்க உதவி புரியும்.
முன் பக்கத்திலுள்ள சிறிய கேமரா மூலமும் படங்களை எடுக்க முடியும்.

அறிமுக வீடியோ

அறிமுக வீடியோ காட்சியை பார்வையிட, மேலே உள்ள தொடுப்பை அழுத்துங்கள்.

1 comment:

Anonymous said...

Release of iphone on conference. keynote address by steve jobs.

http://events.apple.com.edgesuite.net/1006ad9g4hjk/event/index.html

Post a Comment

உங்கள் எண்ணங்களைப் பகிர்க நண்பர்களே

Related Posts with Thumbnails